இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அந்த போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட் எடுத்ததன் மூலம் இவர் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் முக்கிய ஸ்பின் பவுலர்கள் கூட செய்ய முடியாத சாதனையை இதன் மூலம் செய்துள்ளார். இந்த நிலையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார். அஸ்வின்தான் உலகிலேயே சிறந்த ஸ்பின் பவுலர் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினின் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்து இருந்தார். ஷான் வார்னே, முத்தையா முரளிதரன் போன்ற ஸ்பின்னர்கள் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் 8 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். உலகிலேயே அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த நபர்களின் பட்டியலில் அஸ்வின் தற்போது முதல் இடத்தில் உள்ளார்.
Muttiah Muralitharan talks about Ravichandran Ashwin. He says that Ashwin is currently the best spin bowler in the world.