இன்றைக்கு எல்லாரும் பரபரப்பாக உச்சரிக்கும் பெயர் 'ஹாதியா' கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகனின் மகள் ஹாதியா. இருபத்தைந்து வயதாகும் பெண் தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட முடிவு செய்யும் உரிமையில்லையா? வீட்டுக்காவலில் எப்படி வைக்கலாம்? என்று எல்லாரும் ஹாதியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹாதியாவுக்கிற்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில் காதல் திருமணம் செய்ததற்காய் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட பதினெட்டு வயதேயான சபாவைப் பற்றி கேளுங்கள். துப்பாக்கியில் சுட்டு மூட்டையாக கட்டி ஆற்றில் வீசப்பட்டவர் உயிருடன் திரும்பியிருக்கிறார் சபா. நெஞ்சை உறையச் செய்திடும் அந்த சம்பவம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது வென்றது.
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் அருகில் உள்ள குஜ்ரன்வாலாவில் வசித்த வந்த சபா மற்றும் காய்சர் இருவருக்கும் நான்கு ஆண்டுகளாக காதல் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். மகள் சபாவின் காதலுக்கு அப்பா சம்மதம் தெரிவித்திருந்தார்.
காதலித்தவனை கரம் பிடிக்க வீட்டில் சம்மதம் கிடைத்து விட்டது என்ற மகிழ்வுடன் தன் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் காதலன் காய்சருடன் போனிலும் அவ்வப்போது நேரிலும் சந்தித்து பேசி வந்திருக்கிறார்.