ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என அவரது உறவினர் லலிதா மீண்டும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 1980-ல் சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம். என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன் இருந்தோம்.
ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு தந்தை நடிகர் சோபன் பாபு என்பதாக அனைவரும் கூறினார்கள். சோபன்பாவும் ஜெயலலிதாவும் ஒரே வீட்டில் குடித்தனமும் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு எங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
Jayalalithaa's relative Lalithaa said that Actor Sobhan Babu was the father of Jayalalithaa's daughter, in her interview to Sun news TV channel.