ஆணாதிக்கம் கொண்ட திரை உலகம் - ரகுல் ப்ரீத்தி சிங்

Maalaimalar 2017-11-29

Views 15

ஆணாதிக்கம் கொண்ட திரை உலகம் - ரகுல் ப்ரீத்தி சிங்
தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் திரை உலகம் ஆணாதிக்கம் கொண்டதாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் கால் ஊன்ற வாய்ப்பு தேடியவர் ரகுல் பிரீத்திசிங். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால், பல புதிய வாய்ப்புகள் இவரை தேடி வந்துள்ளன. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இந்த நிலையில் ரகுல் பிரீத்திசிங் அளித்துள்ள பேட்டி....
“திரை உலகில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் இல்லை. தமிழில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் இல்லை.
ஹீரோக்களுக்கும் ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் வெற்றிகளை குவிக்கும் நாயகி நயன்தாராவுக்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக ரூ.3 கோடி தான் சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
திரை உலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள்”.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/28122111/1131418/Hero-Based-Cinema-Industry-says-Rakul-Preet.vpf

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS