இட ஒதுக்கீட்டில் வேலை வழங்க திருநங்கைகள் வலியுறுத்தல்- வீடியோ

Oneindia Tamil 2017-11-29

Views 79

தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு முறையில் தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரியில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் டெல்லி, பூனே, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். அப்போது மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு இடஒதுக்கீட்டின் படி வேலை வாய்புகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் நீலகிரி மாவட்ட திருநங்கை தலைவிக்கான போட்டி நடத்தப்பட்டது. அதில் தலைவியாக நிஷா மற்றும் துணை தலைவியாக பாதுஷாநிஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Des : The Conference on behalf of the South Indian Conference was attended by a number of transgenders from various states and demanded that Central Government govern all their jobs in the reservation system

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS