அரசு அதிகாரிகள் ஊழல் செய்து வருவதாகவும் அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர் லஞ்சஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு…
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சரவணகுமாரிடம் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை, பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர் அரசு அதிகாரிகள் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Des : The AIADMK district secretary alleges that the government officials are being corrupt and the appropriate action should be taken to conduct the inquiry.