மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் அவர் செய்து இருக்கும் இந்த சாதனை இதற்கு முன்பு எந்த ஒரு கிரிக்கெட் பிளேரும் செய்யாத சாதனை ஆகும். சுனில் அம்பரீஷ் என்ற அந்த பிளேயர் தன்னுடைய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மிகவும் வித்தியாசமான முறையில் அவர் டக் அவுட் ஆகி சென்று இருக்கிறார். இந்த டக் அவுட் மூலம் அவர் சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். பலர் அவர் குறித்து காமெடியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக முதல் முறையாக சுனில் அம்பரீஷ் என்ற பிளேயர் களம் இறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதுமட்டும் இல்லாமல் அவர் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து 'ஹிட் - விக்கெட்' முறையின் மூலம் விக்கெட் ஆகி இருக்கிறார். இவர்தான் உலகிலேயே முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் முதல் பந்தில் டக் அவுட் ஆனவர்.
West Indies player Sunil Ambris got duck out by hit wicket. He is the first player to got out like that. He created a new world record by this hit wicket.