டெல்லிக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி காதில், ஒரு ரகசியம் கூறிச் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா தெரிவித்தார். மோடி காதில் ஒபாமா கூறியது என்ன என்பது பற்றி அவரே கூறிய வார்த்தைகள் இதுதான்.
"ஒரு நாடு குழுக்கள் அடிப்படையில் பிரியக் கூடாது" என்று நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் நான் தெரிவித்தேன். இது அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை பார்க்கிறார்களே தவிர ஒற்றுமைகளை பார்ப்பதில்லை" என்றார் ஒபாமா.
ஒற்றுமைகள் என்பது பாலியல் அடிப்படையில் மட்டுமே உள்ளது. நாம் இந்த விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஒபாமா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Former US President Barack Obama said today that he had "privately" told Prime Minister Narendra Modi that a country should not be divided on sectarian lines.