அட முட்டாள்களா, என் பெயர் நக்கத் கான் தான், இப்ப அதுக்கென்ன?: குஷ்பு பதிலடி- வீடியோ

Filmibeat Tamil 2017-12-04

Views 13.4K

அட முட்டாள்களா, என் பெயர் நக்கத் கான் தான் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். அந்த பெயரை அவர் மாற்றவே இல்லை. இந்நிலையில் அண்மையில் சிலர் அவரின் இயற்பெயரை கண்டுபிடித்து கிண்டல் செய்தார்கள். என் பெயர் கான், நான் தீவிரவாதி அல்ல என்று ஸ்டைலாக பதில் கொடுத்தார் குஷ்பு. இந்நிலையில் மீண்டும் பெயரை வைத்து அவரை வம்பிழுத்துள்ளனர். கிண்டல் செய்பவர்கள் சிலர் என் பெயர் நக்கத் கான் என்று கண்டுபிடித்துள்ளனர். முட்டாள்களா அது தான் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர். ஆமாம், நான் ஒரு கான்... இப்போ அதற்கு என்ன? விழித்துக் கொள்ளுங்கள்... நீங்கள் 47 ஆண்டுகள் லேட் என்று பதிலுக்கு கலாய்த்துள்ளார் குஷ்பு. பக்தாஸின் அந்த ட்வீட்டை நான் பார்த்தேன்..கண்டுகொள்ளாதீர்கள்...எப்படி இருந்தாலும் நீங்கள் தமிழகத்தின் மகள்...எப்பொழுதுமே என ஒருவர் குஷ்புவின் ட்வீட்டை பார்த்து கமெண்டு போட்டுள்ளார்.


Actress cum Congress spokesperson Khushbu Sundar tweeted that, 'Some trollers have made a discovery about me..my name is #NakhatKhan.. Eureka!!! Fools that's my name given to me by my parents.. AND YES I AM A KHAN..NOW WHAT???late bloomers,wake up..u are 47 yrs late..

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS