எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் முதல்முறையாக அரசியல் களம் காண்கிறார் விஷால். ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஷால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சட்டத்தை மீறி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவத்தார். மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதே எங்கள் கொள்கை என்றும் அவர் கூறினார்
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.