பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்று நமீதா வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்- வீடியோ

Filmibeat Tamil 2017-12-05

Views 5.1K

வீர் எனக்கு ப்ரொபோஸ் செய்த போது நான் பதில் சொல்லாமல் அழுதுவிட்டேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். நடிகை நமீதா தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி, சக்தி, ஆர்த்தி ஆகிய மூன்று பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் காதல், திருமணம் பற்றி நமீதா கூறியதாவது, நான் வீரை முதன்முதலாக சந்தித்தபோது எங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமை இருப்பது தெரிய வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அவர் தான் என்னை ஊக்குவித்தார். 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி வீரை சந்தித்தேன். ஓராண்டில் அவரை திருமணம் செய்துவிட்டேன். எல்லாமே கனவு போன்று உள்ளது. அவரை ஒரு வருடம் தான் தெரியும் என்றாலும் ஜென்ம ஜென்மமாய் பழகியது போன்று உள்ளது. வீர் கடற்கரையில் வைத்து எனக்கு ப்ரொபோஸ் செய்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அந்த நேரத்தில் மகிழ்ச்சியில் நான் அழுத் துவங்கினேன்.
நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அன்று தான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீர் என்னிடம் கேட்டார். அவர் கேட்காவிட்டால் நானே கேட்டிருந்திருப்பேன்

Actress Namitha said that when Veer proposed her in the beach she started crying out of happiness. Veer asked her to marry him the day she was evicted from the Bigg Boss house.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS