போட்டிக்கு நடுவில் வாந்தி எடுத்த இலங்கை வீரர்கள்.. டெல்லி மீது தவறா.. வீரர்கள் மீது தவறா?- வீடியோ

Oneindia Tamil 2017-12-05

Views 2.9K

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த போட்டியில் புகை, இலங்கை வீரர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தது. இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டி முடித்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்ததாக கூறப்பட்டது.
தற்போது நான்காவது நாளான இன்று போட்டி நடக்கும் போதே இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்து இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது

டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இதனால் அங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அதிகம் பாதிப்பட்டுள்ளனர். இரண்டாம் நாள் போட்டியில் புகையை காரணம் காட்டி லாகிரு காமேஜ், சுரங்கா லக்மால் ஆகியோர் விளையாடாமல் வெளியேறினார்கள். இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டி முடிந்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியிலும் இலங்கை வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் அதிக நேரம் களத்தில் இருந்ததால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டார். மேலும் பாதியில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் சிலண்டர்கள் கொண்டு வரப்பட்டது.

Third test match between India vs Sri lanka held today in Delhi. Delhi pollution disturbs players and camera. Sri Lanka planned to stop the test match against India. Sri Lanka coach says that their players have vomited after Delhi test match. In fourth day match also Sri Lankan player Lakmal vomited in ground.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS