மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 'வேலைக்காரன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களும் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்நிலையில், வேலைக்காரன் படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர் பெயர்களை வெளியிட்டு மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளது வேலைக்காரன் படக்குழு. நேற்று இரவு 'வேலைக்காரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் 'வேலைக்காரன்' படக்குழுவினரை அறிமுகப் படுத்தியுள்ளனர். வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில் கதாபாத்திரங்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 'அறிவு' எனும் கேரக்டரிலும், நயன்தாரா 'மிருனாளினி' எனும் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். ஃபகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்களும் இந்த மோஷன் போஸ்டரில் வெளியாகியுள்ளன.
Sivakarthikeyan and nayanthara starrer 'Velaikkaran' motion poster released officially. Character names of 'Velaikkaran' cast was released in this motion poster.