உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 45% பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமான தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்தே பாஜக ஆட்சியை கைப்பற்றியது என்பது நீண்டகால புகார்.
இந்த சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில்தான் உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதாக மார்தட்டுகிறது பாஜக. ஆனால் புள்ளி விவரங்களொ அப்படியெல்லாம் இமாலய வெற்றியை பாஜக பெறவே இல்லை என்பதையே வெளிபப்டுத்துகிறது.
உ.பியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட மேயர் தேர்தல்களில் 14 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்ட இதர உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பாஜக மிக மோசமான தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இப்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் 45% வேட்பாளர்கள் டெபாசிட்டை கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
In UP civic elections BJP's 3,656 candidates lost their deposit: It was higher than the number of seats it won 2,366