விஷால், தீபா வேட்பு மனு சர்ச்சைகளால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. சுயேட்சைகள் பலரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தீபாவின் வேட்புமனு முறையாக நிரப்பப்படாத காரணத்தால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இதேபோல் நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்ததில் 2 பேர் கையெழுத்து போலியானது என சர்ச்சை வெடித்தது.
இதனால் விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனை முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வேட்புமனு நிரகாரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதை ஏற்க மறுத்து விஷால் சாலை மறியல் போராட்டம் நடத்தினார். மேலும் தம்மை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாகவும் அது தொடர்பான ஆடியோ ஒன்றையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் விஷால் கொடுத்திருந்தார்.
Sourcses said that the Election Commission to change the Returning officer of RK Nagar.