மக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் - விஷால்- வீடியோ

Oneindia Tamil 2017-12-06

Views 584

மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். இன்னும் நான் அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமாவில் நடந்தது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்ற கூறியுள்ளார் விஷால்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பேசிய விஷால்,
என் வேட்புமனுவை தள்ளுபடி செய்தது நிறைய பேருக்கு சந்தோசம். என் மீது எந்த எப்ஐஆரும் இல்லை. ஆனால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

72வது வேட்புமனுவாக பரிசீலிக்க வேண்டும். ஆனால் 145வது வேட்புமனுவாக என் மனுவை பரிசீலனை செய்தனர். எல்லோருடைய மனுவையும் தேர்தல் அதிகாரியே முடிவு செய்தார். ஆனால் எனக்கு மட்டும் ஏன் வெளியில் போய் பேசினார் என்று தெரியவில்லை.
என்னுடைய புகாரை மனசாட்சிப்படி ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார்.
தேர்தல் அதிகாரிகாரியின் அறிவிப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. நான் பேட்டி கொடுத்த பின்னர் யாருமே அப்ஜெக்ட் செய்யவில்லை. வீட்டிற்கு போய் விட்டு வருவதற்குள் வேட்புமனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

Actor Vishal has said that he will raise his voice more soundly for the sake of the people

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS