ஜோதிகா வசனத்தால் யாருக்கு பாதிப்பு? சாட்சிகளின் பட்டியலை கொடுங்கள்..கரூர் நீதிமன்றம் அதிரடி!- வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 2

நாச்சியார் படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் கடைசியில் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது. இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா மீது கடந்த மாதம் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே ஜோதிகா மீதும், அப்படத்தின் டைரக்டர் பாலா மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிந்தார்.

who affected by the dialogue of Jothika in the Nachiyar film Karur court needs proof. Case filed agaist Jothika and Director Bala for Nachiyar movie trailor. Karur court orders Indian republic party State Organizer Thalith Pandiyan who filed case against them.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS