இந்த ரணகளத்திலும் இது உங்களுக்கு தேவையா மிஸ்டர் விஷால்?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-08

Views 2.9K

இந்த ரணகளத்திலும் இந்த வேலை தேவையா என்று நெட்டிசன்ஸ் விஷாலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட ஆசைப்பட்டு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் வேட்புமனு தாக்கல் செய்ததை வைத்து ஒரு படமே எடுத்துவிடலாம் போல, அத்தனை திருப்பங்கள். இதை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அரசியலுக்கு வர திட்டமிட்ட விஷால் திடீர் என்று தேர்தலில் போட்டியிட களத்தில் இறங்கினார். கடிதங்களில் இப்படிக்கு என்று எழுதுவது போன்று மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே போட்டியிடுவதாக பேட்டிக்கு பேட்டி கூறினார் விஷால்.
விஷாலும் தனது வேட்புமனுவை ஏற்க வைக்க சினிமா ஸ்டைலில் ஆடியோ, வீடியோ எல்லாம் வெளியிட்டார். சினிமாவில் வெந்த பருப்பு அரசியலில் வேகாமல் போய்விட்டது.
தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர்தல் ஆணைய அலுவலகம் என்று ஓடிக் கொண்டிருந்தபோது கூட விஷால் ட்வீட் செய்தார். நேற்றும் அத்தனை பரபரப்புக்கு இடையே ட்வீட்டிக் கொண்டிருந்தார். நடப்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்று ட்வீட்டியிருக்கிறார்.
ஏன் விஷால், இந்த ரணகளத்திலும் ஓயாமல் ட்வீட் பண்ணுகிறீர்களே. போய் போலீசில் புகார் கொடுப்பதை விட்டுட்டு ட்வீட்டாம் ட்வீட்டு. நல்ல விளம்பரம் கிடைக்கிறதோ என்று நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்துள்ளனர்.


Netizens make fun of actor cum producer Vishal for keep on tweeting while running here and there to make the officials accept his nomination for the upcoming RK Nagar bypoll.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS