அட்லீக்கு ஒரு நியாயம்... விக்கிக்கு ஒரு நியாயமா ஞானவேல்ராஜா?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-08

Views 11.1K

தீபாவளிக்கு வெளியான மெர்சல் பல சர்ச்சைகளில் சிக்கியது. அதில் ஒன்று கதைத் திருட்டு. படம் அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் ஆகிய இரண்டு படங்களின் காப்பி என்பது குற்றச்சாட்டு. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர் கதிரேசன்தான். இவர் ரஜினியின் மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்தார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் வரை போனது அட்லீயை ஃப்ரீமேக்கிங் இயக்குநர் என்ற அடைமொழியுடன் கண்டித்தனர் நிர்வாகிகள். அட்லீக்கு நோட்டிஸும் அனுப்பப்பட்டது. அதன் பிறகு அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்நிலையில் சூர்யா நடிக்க ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் படம் ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் உரிமையை மகன் பிரசாந்துக்காக தியாகராஜன் வாங்கி வைத்திருக்கிறார். ஞானவேல்ராஜா இத்தனை நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவ செயலாளராக இருந்தார். தானா சேர்ந்த கூட்டம் கதையைக் கேட்கும்போதே அவருக்கு இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். அப்ப அட்லீக்கு ஒரு நியாயம்? விக்கிக்கு ஒரு நியாயமா? எனக் கேட்கிறார்கள் தயாரிப்பாளர் சங்க மற்ற நிர்வாகிகள். என்ன பதில் சொல்லப் போகிறார்?


Producer council secaratery Gnanavelraja is in trouble due to plagiarism allegation on his Thana Serntha Koottam movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS