என்னது, விசுவாசம் பட பூஜை சத்தமில்லாமல் முடிந்துவிட்டதா?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-08

Views 3.4K

அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் பூஜை நேற்று சத்தமில்லாமல் முடிந்துவிட்டது என்று கூறப்பட்டது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை அடுத்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவும், அஜீத்தும் ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்திற்கு தான் வேலைகளை துவங்கும் முன்பே தலைப்பை அறிவித்துள்ளார் சிவா. தல அடிக்கடி விசுவாசம் பற்றி பேசுவதால் அதையே தலைப்பாக்கிவிட்டார் சிவா. இந்நிலையில் விசுவாசம் படத்தின் பூஜை நேற்று சத்தமில்லாமல் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது.
விசாரித்துப் பார்த்தால் அது விசுவாசம் பூஜை இல்லையாம். சிவாவின் புதிய அலுவலகத்திற்கான பூஜையாம். விசுவாசம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தல ஏற்கனவே விசுவாசம் படத்திற்காக தலைமுடிக்கு டை அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Buzz is that Viswasam pooja was held on decemeber 7th in Chennai. A picture was also released justifying it. But the truth is that picture was taken during director Siva's new office pooja.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS