வீக்கென்ட் மந்தமா இருக்கா? இன்னும் உங்க நாள் ஸ்டார்ட் ஆகலையா... கவலைய விடுங்க... இந்த படங்கள ஒரு தடவைக்கு ரெண்டு தடவை உத்து பாருங்க... உங்க நாள் செம்மையா ஸ்டார்ட் ஆயிடும். எல்லாத்துக்கும் நேரம் தான் காரணம். என்ன தான் நாம் முயற்சிப் பண்ணாலும் எந்த செயலா இருந்தாலும், அந்தந்த நேரங்காலத்துல தான் அமையும்...ன்னு... வீட்டுல இருக்க பெரியவங்க பல தடவை சொல்லியிருப்பாங்க. நீங்களும் கேட்டுருப்பீங்க. இதோ! அப்படி சரியான நேரத்துல கிளிக் பண்ண அசத்தல் படங்கள் தான் இவை. நாமளா பிளான் பண்ணிப் பண்ணாலும் இப்படியான போட்டோஸ் அமையாதுன்னா பார்த்துக்கங்களேன். சிலர் சொல்வாங்க... எல்லாத்துக்கும் லக் வேண்டும்... அப்பத்தான் நடக்கும்ன்னு ஒருவேளை இந்த படங்கள் கூட லக்குல நடந்திருக்கலாம். சரி வாங்க நேரத்தை வீணடிக்காம போட்டோஸ் பார்க்கலாம்
பெரூ நாட்டில் நடந்த ஒரு விபத்தின் போது தீயணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு தீயணைப்புப் படை வீரர். இது ஒரு சிறந்த க்ளிக் ஆகும். தங்கள் உயிரை பணயம் வைத்து, பிறர் உயிரை காக்கும் சிறந்த துறை தீயணைப்புத் துறை. இவர்களை தான் உண்மையான ஹீரோ என சொல்ல வேண்டும்.
பூக்கள் மீது காதல் கொண்ட தேன் பருகும் வண்டொன்று, சூரியனை பரிசளிக்க தூக்கி செல்லும் காட்சி. காணக் கிடைக்காத அற்புதமான காட்சி இது. இந்த படத்தை க்ளிக் செய்த நபருக்கு பெரிய சபாஷ் போட வேண்டும். இது ஒரு கவித்துவமான புகைப்படமாகும்.
தேவதை... தேவதை.... அவளொரு தேவதை... என இந்த படத்தைக் கண்டவுன் மனதுக்குள் பாடல் வரிகள் ஒலிக்க துவங்கிவிடுகிறது. சிறகுகள் இருந்தால் தான் தேவதையா? இதோ அவளிடம் சிறகுகளும் இருக்கிறது... என க்ளிக் செய்து காண்பித்துள்ளார் இந்த புகைப்படக் காரர். அடடே! ஆச்சரியக்குறி!!! என பார்த்திபன் போல சொல்ல வைக்கிறது!
Perfectly Timed Photos That Will Mess With Your Head