கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில்இ ஓகி புயல் தாக்கத்தால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மின்சார விநியோகத்தை விரைந்து சீரமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆஸ்டின் பிரின்ஸ் சுரேஷ்ராஜன் மனோ தங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய 5 எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்
Des : MLAs who took part in the sit-in strike withdrew the protest after they promised to take steps to restore the missing fishermen in the Kanyakumari district.