மத்திய பாஜக அரசை தொடர்ந்து சீண்டிவரும் அக்கட்சி லோக்சபா எம்.பியும், நடிகருமான சத்ருகன் சின்ஹா இப்போது புது அம்பை ஏவியுள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மற்றொருவர், சத்ருகன்சின்ஹா.
சின்ஹாக்கள் இருவருமே, மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டனர்.இதோ மற்றொரு டிவிட்டை வெளியிட்டு விமர்சன கணையை வீசியுள்ளார் சத்ருகன் சின்ஹா. அதை பாருங்கள்.
மரியாதைக்குரிய ஐயா! தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நம்ப முடியாத கதைகளை, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தினமும் அவிழ்த்துவிட வேண்டுமா? இப்போது, பாகிஸ்தான் தூதர் மற்றும் ராணுவ ஜெனரல்களுடன் அவர்களை இணைத்து பேச வேண்டுமா?ஐயா! புது புது ட்விஸ்டுகள், கதைகளை தவிர்த்துவிட்டு, நாம் சொன்ன வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம். வீட்டு வசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஆரோக்கியம், குஜராத் வளர்ச்சி மாடல் ஆகியவை குறித்து பேசலாம். மதவாத சூழ்நிலையை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான அரசியலுக்கும், ஆரோக்கியமான தேர்தலுக்கும் செல்லலாம். இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
On Twitter, BJP MP Shatrugan Sinha posted, "Instead of new twists & turns, stories & cover ups, let's go straight to the promises that we made, regarding housing, development, employment of youth, health, "Vikas model". Lets stop communalising the atmosphere & go back to healthy politics & healthy elections. Jai Hind!".