பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதிஷ், யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான 'சத்யா' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் கடந்த வருடம் வெளியான 'க்ஷணம்' படத்தின் ரீமேக் தான் இந்த 'சத்யா. தெலுங்கில் வெற்றிபெற்ற 'க்ஷணம்' படத்தை தமிழில் அப்படியே எடுத்திருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது 'சத்யா' திரைப்படம். சிறப்பான திரைக்கதையால் படம் விறுவிறுப்பாகச் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு முன்னணி நடிகர் இப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல... விஜய் தான். சிபிராஜை போனில் அழைத்த விஜய், 'சத்யா' படத்தின் பெரிய வெற்றிக்காக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சிபிராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிபிராஜ், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப் படங்கள் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் பாராட்டுவது விஜய்யின் வழக்கம். சமீபத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தையும் பாராட்டினார் விஜய்.
'Sathya' lead by Sibiraj, Ramya Nambeesan and Varalakshmi directed by Pradeep Krishnamurthy. Vijay called actor Sibiraj and congratulated him for the big success of 'Sathya' movie. Sibiraj posted this information on his Twitter page.