என் சாவுக்கு 3 பேர் காரணம்: செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டு காமெடி நடிகர் தற்கொலை- வீடியோ

Filmibeat Tamil 2017-12-11

Views 37.1K

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் விஜய் சாய் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். செல்ஃபி வீடியோ எடுத்து வைத்துவிட்டு இறந்துள்ளார்.
சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் விஜய் சாய். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் விஜய். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணக் கஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் சாய்க்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவரின் முன்னாள் மனைவி அவரை டார்ச்சர் செய்து பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாராம். விஜய் சாயை அவரது மகளை பார்க்காவிடாமல் அவரின் முன்னாள் மனைவி கொடுமைப்படுத்தினாராம். மேலும் ஆட்களை அனுப்பி விஜய் வைத்திருந்த மாருதி ஸ்விப்ட் காரையும் எடுத்துச் சென்றுவிட்டாராம் அந்த பெண். விஜய் இன்று காலை 4 மணி முதல் 5 மணிக்குள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்யும் முன்பு அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் முன்னாள் மனைவி, அவரின் வழக்கறிஞர், இயக்குனர் சசிதர் என்று கூறியுள்ளாராம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS