குருவாயூர் கோவிலில் பக்தர்கள் பரவசத்தால் மிரண்ட யானைகள்.. பாகன் பரிதாப பலி!- வீடியோ

Oneindia Tamil 2017-12-11

Views 6

புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி ஊர்வலத்தின் போது பக்தர்கள் போட்ட சத்தத்தால் யானை மிரண்டு தாக்கியதில் பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 'கிருஷ்ணன், ரவி கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன்' ஆகிய பெயர்கள் கொண்ட மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு, 'கிருஷ்ணன், ரவி கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன்' ஆகிய பெயர்கள் கொண்ட மூன்று யானைகள் சாமி சிலைகளை ஏந்தியபடி கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்றன.

ஐயப்பன் சன்னதி அருகே கிருஷ்ணன் யானை பின்னால் சென்ற பக்தர்கள் சத்தம் போட்டபடி சென்றனர். பக்தர்களின் சத்தத்தால் கிருஷ்ணன் என்ற யானை மிரண்டது.

இதில் தேவகி அம்மாள் என்ற 63 மூதாட்டி மற்றும் ஹரி என்ற 12 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் ரவி கிருஷ்ணன் யானையை பாகன்கள் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Elephant feared in Guruvayur temple by devotees noise. A 37 year mahout killed by the elephant in the temple.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS