ஜாய்ரா பாலியல் புகார்... எனது கணவர் அப்பாவி... தவறாக புரிந்து கொண்டீர்கள்... சச்தேவின் மனைவி பரபர

Oneindia Tamil 2017-12-11

Views 1

விமானத்தில் தங்கல் நடிகை ஜாய்ரா வாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விகாஷ் சச்தேவ் ஒரு அப்பாவி என்று அவரது மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகாட்டாக நடித்தவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(17). இதையடுத்து அவர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்திலும் நடித்தார்.
இவர் கடந்த சனிக்கிழமை விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பை சென்றுள்ளார். அதே விமானத்தில் அவரது இருக்கைக்கு பின்புறம் விகாஷ் சச்தேவ் (39) என்பவர் பயணம் செய்தார். அவர் ஜாய்ராவின் பின்பகுதியில் அவரது காலால் உரசியதாக ஜாய்ரா கண்ணீர் பேட்டி அளித்தார். இதுகுறித்து போலீஸாரிடம் ஜாய்ரா புகார் கொடுத்தார்.

அந்த நபரை போட்டோவும் எடுத்திருந்தார். ஆனால் போட்டோவில் அவரது உருவம் கிளியராக இல்லை. எனினும் ஜாய்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விகாஷ்தான் என்று போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து ஜாய்ராவுக்கு 17 வயதே ஆவதால் விகாஷை கைது செய்து அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கணவர் மீதான இந்த புகார் குறித்து அவரது மனைவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளா

The wife of Vikash Sachdev, the man arrested for allegedly molesting 'Dangal' actor Zaira Wasim onboard a Delhi-Mumbai flight on Saturday night, has claimed that her husband is innocent and that there may have been a misunderstanding

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS