பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தா வந்துள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் கொல்கத்தாவில் தங்கி இருக்கிறார். அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக நேற்று அவர் கால்பந்து விளையாடினார். இந்த நிகழ்வில் கலந்து கொளவதற்காகவே அவர் முக்கியமாக இந்தியா வந்துள்ளார். அவர் கால்பந்து போட்டியில் விளையாடுவது மட்டும் இல்லாமல் கங்குலி நடத்தும் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்கிறார். அதேபோல் நேற்று அவருக்கு கொல்கத்தாவில் சர்ப்ரைசாக சிலை ஒன்று நிறுவப்பட்டது.
பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா தற்போது கொல்கத்தா வந்துள்ளார். அவர் கொல்கத்தாவில் இருக்கும் 'ஸ்ரீபூமி' கால்பந்து கிளப்புடன் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த போட்டி நடந்தது. இதில் பேசிய அவர் ''நான் கால்பந்து உலகில் கடவுள் இல்லை. நான் சாதராண வீரன்தான். கொல்கத்தாவில் இருப்பது பிடித்து இருக்கிறது'' என்றார்.
இந்த நிலையில் அந்த நிகழ்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாரடோனா நிதி உதவி அளித்தார். ஒரு குழந்தைக்கு 10 ஆயிரம் வீதம் 11 குழந்தைக்கு பணம் அளித்தார். மேலும் அந்த தொண்டு நிறுவனத்திற்காக ஏசி வசதி உள்ள ஆம்புலன்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அவர் தன் நெருங்கிய தோழியுடன் வந்து இருந்தார்.
இந்த நிகழ்வில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மாரடோனாவிற்கு சிலை திறக்கப்பட்டது. மாரடோனா இந்த சிலையை திறந்து வைத்தார்.1986 அர்ஜெண்டினா அணிக்காக அவர் கால்பந்து உலகக் கோப்பை வாங்கி கொடுத்த புகைப்படம் சிலையாக செய்யப்பட்டு இருந்தது. இந்த சிலை 12 அடி இருந்தது. அதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாக மாரடோனா பேட்டி அளித்துள்ளார்.
Diego Maradona has landed in Kolkata for the second time since 2008 and the Argentine legend is all set to take the football-mad city by storm for the next three days. I'm happy to be here in Kolkata again," Maradona said during a charity event in Sreebhumi Sporting Club, Kolkata.He unveiled a 12-feet statue of him holding aloft the 1986 World Cup trophy and it would be erected at a park named after name.