ஒரு வழியாக சத்தமில்லாமல் நாம் எல்லாருமே எதிர்ப்பார்த்த விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்து முடிந்திருக்கிறது.நேற்று இரவிலிருந்து சமூக வலைதளங்கள் எங்கும் இத்திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த அனுஷ்காவிடம் உங்களது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கேள்விக்கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறுகையில் என்னுடைய திருமணம் டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்க வேண்டும். அந்த இடம் இயற்கை சூழல் மிகுந்த இடமாக அமைந்திருக்க வேண்டும் அதுவும் திராட்சை தோட்டத்திற்கு நடுவே எங்களது திருமணம் அரங்கேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதோ.... இன்றைக்கு அவருடைய காதலர் விராட் அதனை நிறைவேற்றியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி குடும்பத்தினர் விமானம் மூலமாக இத்தாலி பறந்தனர். குடும்பத்தினருடன் செல்வது, கலந்து கொள்ளவிருக்கும் போட்டிகள், ஒப்பந்தம் இட்டிருக்கும் படங்களில் இருந்து விலகிக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பிச் செல்வது திருமணத்திற்கு தான் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது.
சரி, இத்தாலியில் இருக்கிற மிலன் நகரில் அவருடைய திருமணம் நடக்கவிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் இல்லாமல் மிலனிலிருந்து நான்கு கிலோ மீட்டர் பயணத்தில் வரக்கூடிய டஸ்கேனி என்ற இடத்தில் இருக்கிற Borgo Finocchieto என்ற இடத்தில் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு விவிஐபிக்கள் இங்கே வருகை தருவார்களாம். கிட்டதட்ட 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது. borgo என்றால் இத்தாலிய மொழியில் கிராமம் என்று பெயர்.Finochietto என்றால் நிலம் என்று பொருள்.