என்னமா பின்றாங்கப்பா.. சென்னையை கலங்கடிக்கும் ரஜினிகாந்த் அரசியல் போஸ்டர்கள்!...வீடியோ

Oneindia Tamil 2017-12-12

Views 1

அரசியலுக்கு, இன்று வருவார், நாளை வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து, கண்கள் பூத்துப்போயுள்ள நிலையில், போஸ்டரிலாவது தங்கள் தலைவர் ரஜினியை முதல்வராக்கி அழகு பார்க்கலாம் என நினைத்து அவரது பிறந்த நாளான இன்று சென்னை முழுக்க அசத்தல் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். சூப்பர் ஸ்டார் என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆக்டிவ் ஆரசியலில் ஈடுபடவில்லை. அதிமுகவில் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா மறைந்து ஓராண்டாகிவிட்டது.

இது அரசியலில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. இதை நிரப்ப இப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் அவா. 67வது பிறந்த நாளில் அதை அறிவிப்பார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். போர் வரும்போது பார்த்துக்கலாம், ரெடியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சில மாதங்கள் முன்பு ரஜினி பேசிய பேச்சு ரசிகர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி வைத்துள்ளது.

இந்த நிலையில், ரஜினி பிறந்த நாளை வழக்கத்தைவிட வித்தியாசமான போஸ்டர்களால் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அதில் சென்னையில் ஒட்டப்பட்ட சில சுவாரசிய போஸ்டர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பதை போலவும், சில அவர் ஏற்கனவே முதல்வராகி விட்டதை போலவும் எல்லாம் இருந்தன.

ஒரு போஸ்டர் இப்படி சொல்கிறது: "வெற்றிடத்தை நிரப்ப வெத்தலை பாக்கு வைத்து அழைக்கிறோம்" என்று நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு, டைமிங்கோடு நல்ல ரைமிங்காகவும் இருந்தது.



RajiniKanth fans putting posters in across Chennai ahead of his beloved actor's 67th birthday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS