சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ

Oneindia Tamil 2017-12-12

Views 52

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதே வழக்கில் மாரிமுத்து என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அலமேலு தீர்ப்பளித்தார்.
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.

வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி அலமேலு அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசாமியுடன் ஜெகதீஷ், மணிகண்டன், கலைதமிழ்வாணன், செல்வகுமார், மைக்கேல் என மொத்தம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

A Tirupur court will pronounce its verdict in the Udumalpet Shankar murder case on today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS