காட்டுத்தீக்குள் துணிச்சலுடன் சென்று தீயை அணைத்த விமானி..வீடியோ

Oneindia Tamil 2017-12-12

Views 3

கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் மிகவும் திரில்லாக அணைத்து இருக்கிறார். சாண்டா பார்ப்பாரா பகுதியில் உருவாகி இருக்கும் 'லீலாக்' தீயை அணைக்க அவர் விமானத்தில் மிகவும் தாழ்வாக பறந்து இருக்கிறார். கலிபோர்னியாவில் தற்போது பெரிய அளவில் காட்டுத் தீ உருவாகி இருக்கிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 6 காட்டுத் தீயில் தாமஸ் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக லீலாக் தீ தற்போது அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியை விமானி ஒருவர் மிகவும் தில்லாக அணைத்துள்ளார்.
இதற்காக அவர் விமானத்தை மிகவும் தாழ்வாக ஓட்டி சென்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விமானத்தை நேரடியாக நெருப்புக்குள் விட்டு உள்ளார். பின் அங்கிருந்து தீயணைக்கும் சிவப்பு நிற திரவத்தை தெளித்து உள்ளார். என்ன ஆகுமோ என்று நினைக்கும் சமயத்தில் சரியாக விமானத்தை எடுத்துவிட்டு பறந்துள்ளார்.

One of the most destructive fires in California's history was raging in a sprawling national forest and creeping up the Pacific coast, forcing new evacuations. A pilot drives flight into California wild fire bravely to stop the fire from spreading

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS