முயலை காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த இளைஞர்.. வீடியோ

Oneindia Tamil 2017-12-12

Views 4

கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயில் இருந்து முயலை காப்பாற்றுவதற்காக ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து இருக்கிறார். அவர் முயலை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. கலிபோர்னியாவில் தற்போது பெரிய அளவில் காட்டுத் தீ உருவாகி இருக்கிறது. இதனால் 100க்கும் அதிகமான மனிதர்கள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் நிறைய விலங்குகள் மரணம் அடைந்து இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று சாண்டா பார்பாரா பகுதியில் முயல் ஒன்று நெருப்பில் சிக்கி இருக்கிறது. இதை பார்த்த ஒரு இளைஞர் உடனடியாக அதை காப்பாற்ற சென்று இருக்கிறார். உயிரைக் கொல்லும் அந்த நெருப்புக்கு மத்தியில் அவர் தைரியமாக சென்று உள்ளார். மேலும் சூடான அந்த முயலை கையில் தூக்கி அணைத்து தன் உடலோடு ஒட்டி வைத்து இருக்கிறார். கஷ்டப்பட்டு அந்த முயலை அவர் உயிரோடு காப்பற்றி இருக்கிறார்.

தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. முயலின் உயிரைக் காப்பாற்றிய அவரின் தைரியத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


A brave man saves rabbit from California wild fire. The video of that unknown man goes viral in social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS