நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி வகித்துக்கொண்டு தேர்தலில் நிற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்தது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முந்தைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்கிய நாசர், விஷால், பொன்வண்ணன் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது.
Actor Vishal filed a nomination to contest in RK Nagar by-election. Actor Ponvannan announced his resignation of the Vice president of Nadigar sangam. In this case, "I am withdrawing the letter of resignation from the Vice President of Nadigar sangam," said Ponvannan.