தன் மகள் ஆராதனாவுக்கு எந்த நடிகர், நடிகை மிகவும் பிடிக்கும் என்பதை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தனி ஒருவனை போன்று இந்த படமும் நிச்சியம் வித்தியாசமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் கெரியரில் இந்த படம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மகளுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்பதை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவுக்கு பிடித்த ஹீரோ வேறு யாரும் இல்லை அவர் அப்பா தான். பிடித்த ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாம். டிவியில் நயன்தாராவை பார்த்தால் அப்பா எனக்கு பிடித்த ஹீரோயின் இவர் தான் என்பாராம் ஆராதனா.
Sivakarthikeyan said that he is the favourite hero of his little princess Aaradhana and Nayanthara is her favourite heroine. Siva and Nayanthara have come together for the first time for Mohan Raja's Velaikkaran.