ஆர்கே நகரில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் தெரியுமா ?- வீடியோ

Oneindia Tamil 2017-12-14

Views 1.4K

ஆர்கே நகர்தொகுதியில் போட்டியிடும் 59 வேட்பாளர்களில் எத்தனை பேருக்கு குற்றப்வின்னணி உள்ளது. அவர்களின் நிதி நிலைமை மற்றும் கல்லி உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. அறப்போர் இயக்கமும், ஜனநாயக சீர்திருத்த சங்கமும் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் 4 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகள், 8 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளது. இதே போன்று 47 சுயேச்சை வேட்பாளர்களின் சுய வாக்குமூலத்தையும் ஆராய்ந்து வேட்பாளர்கள் வழங்கிய விவரங்கள் அடிப்படையில் அவர்களின் குற்றவியல் பின்னணி, நிதி, கல்வி உள்ளிட்டவற்றை பகுத்தாய்ந்துள்ளனர்.

இந்த முடிவுகளை அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது : 59 வேட்பாளர்களில் 4 பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதே போன்று 59 வேட்பாளர்களில் 7 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arappor Iyakkam released a details about the RK Nagar candidates Criminal background, education and the assests of them, and who is top in the list also revealed

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS