அரசியல் மற்றும் திருமணம் பற்றி பேசிய வரலஷ்மி- வீடியோ

Filmibeat Tamil 2017-12-15

Views 17.3K

நடிகை வரலட்சுமி 'போடா போடி', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர். கடந்த சில வருடங்களாக ஹீரோயின் கேரக்டர் தவிர்த்து படத்தின் முக்கியமான கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். 'விக்ரம் வேதா' படத்தில் கதிர் ஜோடியாக நடித்திருந்தவர் சமீபத்தில் வெளியான 'சத்யா' படத்திலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமல்லாது சேவ் சக்தி என்ற பெண்கள் தொடர்பான அமைப்பையும் துவக்கி உள்ளார் வரலட்சுமி.
இந்நிலையில், வரலட்சுமி சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக வரலட்சுமி அரசியலில் இறங்கிவிட்டதாகவும் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்த 'சத்யா' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி, நான் நடத்தும் சேவ் சக்தி அமைப்பு தொடர்பாக துணை முதல்வரைச் சந்தித்து பேசினேன். நான் அதிமுக கட்சியிலோ, பிற கட்சியிலோ அல்லது என் அப்பாவின் கட்சியிலோ இணையவில்லை. எனக் கூறியுள்ளார். தனக்கு சினிமாவிலும், பிற பணிகளிலும் இன்னும் நிறைய பொறுப்புகள் இருப்பதால், திருமணத்தைப் பற்றி இப்போதைக்கு கொஞ்சம்கூட யோசிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் வரலட்சுமி.


Actress Varalaxmi has acted as heroine in many films including 'Poda Podi', 'Thaarai Thappattai'. She also starred in 'Sathya' recently. Varalaxmi has said that, she has not yet thought about marriage as she has more responsibilities.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS