திண்டுக்கல் அருகே 4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற, 17 வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். அய்யலூர் கொம்பேறிபட்டியை சேர்ந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. பாட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது பாட்டி ரேசன்கடைக்கு அழைத்து சென்றார். போகும் வழியில் அதே ஊரை வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் வரவே, குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு சிறுமியின் பாட்டி அவனுடைய இருசக்கர வாகனத்தில் அனுப்பிவைத்துள்ளார்.
ராம்குமாரின் குரூர புத்தி வேலை செய்ய தொடங்கியது. குழந்தையை அங்கன்வாடிமையத்தில் விடாமல் கிணத்துபட்டி அருகே உள்ள மலைபகுதிக்கு அழைத்துசென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு சிறுமி அணிந்திருந்த தோடு கொலுசு போன்றவற்றை எடுத்துகொண்டு சென்றுள்ளான்
அதோடு விடாமல் அந்த கொடூரன்,குழந்தையின் மீது கற்களை அடுக்கி வைத்து விட்டு சென்று விட்டார். குழந்தையை காணாமல் பெற்றோரும், உறவினர்களும் தேட துவங்கினர். பின்னர் அய்யலூரில் சுற்றி கொண்டிருந்த ராம்குமாரை பிடித்து விசாரித்தபோது, குழந்தையை விற்று விட்டேன் என கூறினான். பதற்றமடைந்த பெற்றோர் அவனை அடித்தனர்.
அவன் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் வடமதுரை காவல் துரையினரிடம் ஒப்படைத்தனர் காவல்துரையினர் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்ட ராஜ்குமார் போலீசாரை அழைத்துசென்று சிறுமியின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டியுள்ளான்.
இதன்பிறகே சிறுமியின் உடலை கைப்பற்றி வடமதுரை காவல்துறையினர் விசாரனை நடத்திவருகின்றனர் சிறுமியின் உறவினர்கள் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடசெய்தனர்.