ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைகோட்டுதயத்திற்கு வாக்களிக்க கோரி அக்கட்சியின் தலைவர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வரும் 21 ம் தேதி ஆர். கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து திமுக அதிமுக பாஜக என்று முக்கிய கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் கலைகோட்டுதயனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
அதேபோல் டிடிவி தினகரன், திமுக மருது கணேஷ், அதிமுக மதுசூதனன், பாஜக கரு. நாகராஜ் உள்ளிட்டோரும் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் மேள தாளம் முழங்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Des : MR. Q. Party candidate Seeman has been campaigning for a vote for the Tamil Nadu candidate for the striking election.