காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என்று அறிவிக்கப்பட்டதால் பல்லவன் இல்லம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அமைத்திருந்த தடுப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகள் மீது கற்களை வீசியதோடு கீழே இறக்கி விட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்லவன் இல்லத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊழியர்களிடம் தொழிற்சங்கத்தினர் எடுத்துரைத்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் வெளி ஆட்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
Tamil Nadu State Transport Corporation Employees staged a road roko in front TNSTC Office at pallavan illam Chennai on Friday