மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே ஜெயலலிதா ஆபத்தான நிலையிலேயே இருந்தார் - பிரதாப் ரெட்டி- வீடியோ

Oneindia Tamil 2017-12-16

Views 34.9K

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலையிலேயே கொண்டு வரப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி திடீரென பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில் ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையில் நடப்பதால் வேறு எதும் கூற இயலாது.

எங்களது மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது. ஆனால் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று அறிக்கை தரப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக் கூடாது என்பதாலேயே உண்மை நிலை மறைத்து அறிக்கை வெளியிட்டோம் என்று அவர் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார். முன்பு ஜெயலலிதா விரும்பும் போது வீட்டுக்கு செல்லலாம் என்றவர் தற்போது இதுபோன்ற அந்தர் பல்டி அடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apollo Hospital's CMD Pratap Reddy says that Jayalalitha was admitted in our hospital in dangerous state. We had given press release as fever for her because to maintain law and order problem.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS