எச் ராஜா திடீர் கைது- வீடியோ

Oneindia Tamil 2017-12-16

Views 7.4K

திருமாவளவனை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எச் ராஜா கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இந்துக்களின் மனது புண்படும்படி பேசியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து திருமாவளவனுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு நாகை போலீஸார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நாகப்பட்டினம் சென்றார். அவரை வாஞ்சியூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். எச் ராஜாவை வரவேற்க சென்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினரையும் போலீஸார் கைது செய்தனர். எச் ராஜா கைது செய்யப்பட்டதால் பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை மாவட்டம் வாஞ்சியூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமாவளவனை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எச் ராஜா கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இந்துக்களின் மனது புண்படும்படி பேசியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து திருமாவளவனுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

H Raja arrested in Nagai Vanjiyur. H Raja went to Nagai for protest again Thirumavalavan.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS