குஜராத் தேர்தலில் முக்கியமாக பார்க்கப்படும் அந்த 3 நபர்கள்- வீடியோ

Oneindia Tamil 2017-12-18

Views 902

குஜராத் சட்டசபை தேர்தல் களத்தில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வந்தனர். இந்த முறை இந்த இரு கட்சிகளையும் தாண்டி 3 இளைஞர்கள்தான் குஜராத் சட்டசபை தேர்தல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். 24 வயது ஹர்திக் பட்டேல்.. சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடிய வயது கூட இல்லாத இளைஞர். இவரது தலைமையில்தான் இதுநாள் வரை பாரதிய ஜனதாவின் பிரதான வாக்கு வங்கியாக இருந்த பட்டேல்கள் சமூகம் ஓரணியாக திரண்டுள்ளது

குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, இடஒதுக்கீடு கோரி வரலாறு காணாத கிளர்ச்சியை ஹர்திக் பட்டேல் நடத்தினார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஹர்திக் பட்டேல் தலைமையில் சிறை சென்றனர். தேசதுரோக வழக்குகளை எதிர்கொண்டனர். தற்போது தேர்தல் களத்தில் காங்கிரஸுடன் கை கோர்த்துள்ளார் ஹர்திக் பட்டேல்.
பிற்படுத்தப்பட்ட சமூகமான சத்ரிய தாகுர் சமூகத்தைச் சேர்ந்த அல்பேஷ் தாகூரும் இந்த தேர்தல் களத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளுடன் காங்கிரஸில் இணைந்துள்ளார் அல்பேஷ்.

Gujarat election have showed new faces like Hardik Patel, Alpesh Thakor and Jignesh Mevani who are viewed as opposition leaders in the state.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS