குஜராத் சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாஜக உண்மையிலே பெருநன்றியை சொல்ல வேண்டியது நோட்டா, பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குத்தான். இந்த கட்சிகளால்தான் 8 தொகுதிகளில் காங்கிரஸ் சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவ பாஜக எளிதாக வென்று ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது. என்கின்றன தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள்.
குஜராத்தில் 99 இடங்களைப் பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாஜக 99, காங்கிரஸ் 77, தேசியவாத காங்கிரஸ் 1, பாரதிய பழங்குடி கட்சி 2, சுயேட்சைகள் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 92. இதற்கும் கூடுதலாக 7 தொகுதிகளைப் பெற்று அரியாசனத்தில் பாஜக அமர்ந்துவிட்டது.
உண்மையில் இந்த தொகுதிகள் என்பது நோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டு காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பறித்ததால் பாஜகவுக்கு கிடைத்தவைதான்
According to the Election Commission data the Congress party lost 8 seats by victory margin between 200 And 3,000 in Gujarat Assembly elections.