அனிருத், சிவகார்த்திகேயன் காம்போ எப்படி வெற்றிகரமாக உள்ளது என்ற ரகசியத்தை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கேரளாவில் நடைபெற்றது. அந்த சந்திப்பின்போது ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால் ஃபஹத் ஃபாசிலுக்கு அப்படி இல்லை. படத்தில் 8, 9 பக்க வசனங்கள் எல்லாம் இருந்தது. அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. தமிழில் ஃபஹதை பார்க்காதவர்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஃபஹதோடு நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்பது தான் எனக்கு இருந்த சவாலே. ஃபஹத் எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நடக்கும்.
நயன்தாரா தென்னிந்தியாவில் ஒரு டாப் ஸ்டார். அவரின் அர்ப்பணிப்பு, சின்சியாரிட்டியால் தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமேல் பெண்கள் நடிக்க வரும்போது நயன்தாராவை ரோல்மாடலாக வைத்து தான் வருவார்கள்.நயன்தாராவுடன் நடித்ததில் மகிழ்ச்சி.
Sivakarthikeyan attended Velaikkaran press meet held in Kerala ahead of the movie release. He revealed the secret of Sivakarthikeyan-Anirudh combo's victory.