கமல் பட பாடலை தலைப்பாக்கிய உதயநிதி மற்றும் சீனு ராமசாமி !!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-19

Views 6.7K

நடிகர் உதயநிதி ஸ்டாலின், சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'கண்ணே கலைமானே' என வைக்கப்பட்டுள்ளது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 'கண்ணே கலைமானே' படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் வெற்றியடைந்தாலும், சமீப காலமாக அவர் நடித்துவரும் படங்கள் எதுவும் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.
இந்நிலையில், இவர் தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடலை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இருக்கிறார்.
விஜய் சேதுபதியை வைத்து, 'தென்மேற்கு பருவக் காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றி படங்களைக் கொடுத்து விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமியுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தில் நடிக்கிறார் உதயநிதி.
மூன்றாம் பிறை படத்தில் ஜேசுதாஸ் பாடிய 'கண்ணே கலைமானே... கன்னி மயிலென கண்டேன் உனை நானே' எனும் பாடலின் முதல் வரியான 'கண்ணே கலைமானே' உதயநிதி பட டைட்டில் ஆகியிருக்கிறது. இது கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Actor Udhayanidhi Stalin's next movie titled as 'Kanne Kalaimaane' directed by Seenu Ramasamy. Talking to Tamanna to act as a heroine in 'Kanne Kalaimaane' is said to be going on. Apart from these, Soori and RK Suresh are also acting in the film. The shooting of the film will begin on January 19, 2018.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS