2ஜி வழக்கில் தீர்ப்பு , தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!- வீடியோ

Oneindia Tamil 2017-12-21

Views 1

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியான உடனே டெல்லியில் கூடியிருந்த திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வீட்டில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.

அதேபோல் கனிமொழி வீட்டு முன்பாகவும் திமுகவினர் பட்டாசு வெடித்தனர். அங்கு திரண்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை பரிமாறினர்.
திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல இடங்களிலும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் இந்த தீர்ப்பை வரவேற்றனர். பெரம்பலூரில் ஆ. ராசாவின் வீடு முன்பாக உற்சாகத்துடன் தொண்டர்கள் திரண்டு முழக்கமிட்டனர்.

DMK party workers and supporters held celebration across TamilNadu after the 2G verdict was delivered.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS