2ஜி வழக்கில் வெற்றி.... கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஆ.ராசா- வீடியோ

Oneindia Tamil 2017-12-22

Views 14.2K

அலைக்கற்றை அரசியலில் அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள, ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொள்ள நான் கரைந்துவிடாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாயே, தீர்ப்பை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

2ஜி தீர்ப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் : தீர்ப்புக்காக டெல்லி செல்லும் முன்னர் 16.12.2017ம் அன்று இரவு உங்களை சந்தித்து வெற்றி பெறவாழ்த்துமாறு கேட்டுக் கொண்டேன். உங்கள் காதருகே சொல்லி வணங்கிய போது உங்கள் உஉதடுகள் சரி என்று உச்சரித்த போது சப்தம் வரவில்லை.

என்றாலும் உங்கள் வலதுகரம் உயர்த்தி புன்னகையோடு வாழ்த்தினீர்கள். கொட்டுகின்ற மழையில் வீசுகின்ற புயலில் சரளைக் கற்கள் நிறைந்த மலை உச்சியை நோக்கி நடப்பதைப் போல அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு நடத்திய இந்த அலைவரிசை பயணத்தில் நான் கரைந்துவிடாமலிருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள்.


Former telecom minister A.Raja writes soulful thank letter to DMK chief Karunanidhi for keeping supporting him in the hard times and now the truth revealed he added.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS