ஆர்.கே நகர் தேர்தல் குறித்து காவேரி - நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டி.டி.வி தினகரன் முன்னிலை வகிக்கிறார். தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 37 சதவீத வாக்காளர்கள் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியுள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு மொத்தம் 1071 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 36 சதவீதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
27 சதவீதம் பேர் 35-45 வயதுடையவர்கள். 26 சதவீதம் பேர் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 சதவீதம் பேர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்த கருத்து கணிப்பில் வாக்காளர்களிடம் பணம் கொடுக்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விக்கு 10 சதவீதம் பேர் ஆம் என்றும் 90 சதவீதம் பேர் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விக்கு 3 சதவீதம் பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 97 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
TTV leads in Cauvery News exit poll on RK nager election. 37% people voted for TTV Dinakaran in RK nager election as per poll. 26% people voted for ADMK Madhusudhanan.