அருவி இயக்குனர் நம்ம சிவகார்த்திகேயன் உறவினர்தானாமே.?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-22

Views 2.5K

இயக்குனர் அருண் பிரபு சிவகார்த்திகேயனின் உறவுக்கார பையன் என்பது தெரிய வந்துள்ளது. அருவி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அருண் பிரபு. முதல் படத்திலேயே தன்னை பற்றியும், படத்தை பற்றியும் அனைவரையும் பேச வைத்துள்ளார். அஸ்மா படத்தை பார்த்து அருவியை எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் பிரபு.

அருண் பிரபுவுக்கு கேமரா புதிது அல்ல. சிறுவனாக இருக்கும் போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அருண் பிரபு வளர்ந்த பிறகு கேரமாவுக்கு பின்னால் சென்றுவிட்டார்.

அருவி படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் அருண் பிரபுவை பாராட்டியுள்ளார். சிவா பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் அருண்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பட வியாபாரம் மூலம் ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Aruvi director Arun Prabhu is none other than Sivakarthikeyan's cousin. The director himself said so in an interview. Sivakarthikeyan has appreciated Arun Prabhu for his big success.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS